
ஆம் நானும் இந்த
உலகின் ஜீவ ராசிகளில்
ஒருவன்தான்
உறங்கி கிடந்தேன் பத்து
மாதங்களாக தாயின் கருவறையில்
பசியறியாது
இன்று உறங்கி கிடக்கிறேன்
பசி அறிந்து பத்து
மாதங்களாய்
ஒவ்வோர் அரிசியிலும் உண்பவன்
பெயர் எழுதபட்டிருக்குமாம் என்
பெயரெங்கே
தேடி அலைந்தேன் குப்பைகளில்
வீசப்பட்ட உணவு பொட்டலங்களின்
உள்ளே
வானமெனும் கூரையின் கீழே
வாழ்க்கை பள்ளியில் வருமைபாடம்
கற்றுகொண்டிருக்கிறேன்
செவிள்கள் இல்லை ஆனாலும்
மீன்வகையை சார்தவன்தான் நீருண்டு
வாழ்கிறேன்
மனித இனத்தின் பரிணாம
வளர்ச்சி நான் காற்றிலும்
மிதக்கிறேன்
பேய் மழை சுட்டெரிக்கும்
வெய்யில் கடும் பனி
இவைஅனைத்தும்
எதிர்கொள்ள இறைவன் போர்த்திய
கருப்பு கம்பலம்தான் இக்கருநிற
தோல்
இன்று வரை அழுததில்லை
கண்ணீருக்கும் கூட கண்களில்
தண்ணீரில்லை
வயிற்றின் வார்த்தைகளும் இதயத்துடிப்பும்
கூட கேட்குமளவு செவிகள்
கூருற்றது
கதவின் இடுக்குகளிலும் இன்று
என்னால் புதுந்து செல்ல
முடியும்
என்னை படம் பிடிக்க
தினமும் வருகின்றனர் ஆயிரம்
புகைப்படக்காரர்கள்
பிதற்றுகிறார்கள் பசியின் வலி
கொடியதென்று வறுமையின் வலிமை
அறியாதவர்கள்
இன்றென்னுள்ளும் இத்தனை சக்திகள்
இவையெல்லாம் படைத்த நானுமொரு
விசித்திரநாயகன்
இறைவா எல்லோருக்கும் என்னைபோல்
வல்லமை தாராயோஎன்று இன்றும்
இறைவனை வேண்டுகிறேன் ..
இன்பம் விழையான் 'இடும்பை இயல்பு' என்பான்
துன்பம் உறுதல் இலன்.