
மறந்துவிட்டேன் நான்
மகிழ்ந்த மணித்துளிகளை
இன்று நான்
கடிகாரத்தின் நொடி
முள் போலதான்
மற்றவரின் தேவைக்காக
என்னுடன் இருப்பவரைவிட
வேகமாக ஓடுகிறேன்
ஓட்டத்தின் வேகத்தில்
என்னை யாரும்
கண்டு கொள்வதில்லை
ஓடும் ஆற்றின்
பெருமை சிந்தும்
மழைதுளிக்கு கிடைப்பதில்லை
சிறகுகள் உள்ளதென்றெண்ணி
நிலவை பிடிக்க
பறக்கின்ற எண்ணம்
கால்களின் கீழே
உள்ள கற்களில்
இடறி விழும்போதுதான்
உண்மை அறிகிறது
உறக்கத்திலிருக்கும் மனது
எஞ்சியது கண்டு
எழுந்து நிற்கிறேன்
கண்ணீர் துடைக்க
என் கைகளில்லை
ஆறுதல் சொல்லி
தேற்ற அண்டைவீட்டு
மாமா இல்லை
அரவனைத்து அன்பு
பொழிய அன்பு
மனைவி இல்லை
இவர்கள் எல்லோரையும்
வேகத்தில் விஞ்சி
காலத்தில் தொலைந்துவிட்டேன்
தொலைந்ததும் தொலைத்ததும்
இழந்ததும் யாரோ
மீட்டுதருவர்கள் என்று
-- இன்றும் நான்
இவன்
வினோத் ச
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
