Monday, July 21, 2008

Ellorukkum Vallamai Kodu


ஆம் நானும் இந்த
உலகின் ஜீவ ராசிகளில்
ஒருவன்தான்

உறங்கி கிடந்தேன் பத்து
மாதங்களாக தாயின் கருவறையில்
பசியறியாது

இன்று உறங்கி கிடக்கிறேன்
பசி அறிந்து பத்து
மாதங்களாய்

ஒவ்வோர் அரிசியிலும் உண்பவன்
பெயர் எழுதபட்டிருக்குமாம் என்
பெயரெங்கே

தேடி அலைந்தேன் குப்பைகளில்
வீசப்பட்ட உணவு பொட்டலங்களின்
உள்ளே

வானமெனும் கூரையின் கீழே
வாழ்க்கை பள்ளியில் வருமைபாடம்
கற்றுகொண்டிருக்கிறேன்

செவிள்கள் இல்லை ஆனாலும்
மீன்வகையை சார்தவன்தான் நீருண்டு
வாழ்கிறேன்

மனித இனத்தின் பரிணாம
வளர்ச்சி நான் காற்றிலும்
மிதக்கிறேன்

பேய் மழை சுட்டெரிக்கும்
வெய்யில் கடும் பனி
இவைஅனைத்தும்

எதிர்கொள்ள இறைவன் போர்த்திய
கருப்பு கம்பலம்தான் இக்கருநிற
தோல்

இன்று வரை அழுததில்லை
கண்ணீருக்கும் கூட கண்களில்
தண்ணீரில்லை

வயிற்றின் வார்த்தைகளும் இதயத்துடிப்பும்
கூட கேட்குமளவு செவிகள்
கூருற்றது

கதவின் இடுக்குகளிலும் இன்று
என்னால் புதுந்து செல்ல
முடியும்

என்னை படம் பிடிக்க
தினமும் வருகின்றனர் ஆயிரம்
புகைப்படக்காரர்கள்

பிதற்றுகிறார்கள் பசியின் வலி
கொடியதென்று வறுமையின் வலிமை
அறியாதவர்கள்


இன்றென்னுள்ளும் இத்தனை சக்திகள்
இவையெல்லாம் படைத்த நானுமொரு
விசித்திரநாயகன்


இறைவா எல்லோருக்கும் என்னைபோல்
வல்லமை தாராயோஎன்று இன்றும்
இறைவனை வேண்டுகிறேன் ..


இன்பம் விழையான் 'இடும்பை இயல்பு' என்பான்
துன்பம் உறுதல் இலன்.

Monday, July 14, 2008

enge naan


காலை தேநீர்
நாளிதழ் செய்திகள்
நறுமண குளியல்

வாசனை திரவியம்
சுருக்கில்லா மேல்சட்டை
தோதான கால்சட்டை

தோளில் கணிப்பொறி
வார்த்தை செருகல்களாய்
தொடர் ஆங்கிலம்

காலை வணக்கங்கள்
முன்தள்ளிய மின்னஞ்சல்கள்
தேநீர் இடைவேளை

நிலை அறிக்கைகள்
வாடிக்கைகாரரோடு கலந்துரையாடல்
செயல் திட்டங்கள்

உணவு இடைவேளை
சமூக உறவு
வலைபக்கங்களில் சிறுதேடல்

சிறிய சோர்வு
வங்கி வலைபக்கங்களில்
சற்று சரிபார்ப்பு

தேநீர் இடைவேளை
அணி தலைவருடன்
சிறு கலந்துரையாடல்

பணியின் தொடர்ச்சி
நாள் அறிக்கை
அலுவலக பணிமுடிவு

வாகன நெரிசல்
சுற்றுசூழல் மாசு
இவையெல்லாம் கடந்து

வீடு வந்து
சேர்கையில் மாலை
எட்டு மணி

எல்லாம் சரியாக
உள்ளது சரியாக
எல்லாம் செய்தாகிவிட்டது

என்றாலும் ஏதோ
ஒன்றை மறந்ததுபோல்
மனம் பதறுகிறதே

சற்று நேர
யோசனைக்கு பின்னறிந்தேன்..
மறந்தது என்னைத்தான்....

இயந்திர வாழ்கை
இதற்கிடையில் இல்லாதாகின்றேன்
இன்றும் நான்..


Wednesday, July 9, 2008

Kandha Sashti Kavasam


துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போற்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணி சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மைய நடம் செய்யும் மயில் வகானனார்

கையில் வேலால் எனைக் காக்க வென்று வந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவண பவனார் சடுதியில் வருக
ரகன பவச ர ர ர ர ர ர ர
ரிகன பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விணபவ சரகான வீரா நமோ நம
நிபவ சரகன நிற நிற நிறென

வசர ஹனபவ வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை யாழும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாசான் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க

விரைந்து எனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிளியும் அடைவுடன் ஸௌவும்
உய்யொளி ஸௌவும் உயிரையும் கிளியும்
கிளியும் ஸௌவும் கிளரொளி யையும்
நிலை பெற்றேன்முன் நித்தமும் ஒளிரும்

ஷண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மநிபூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்ப்பழகுடைய திருவயிர் உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
நவரத்னம் பதித்த நர்ட்சீ ராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாலும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செக கன செக கன செக கன செகண
மொக மொக மொக மொக மொக மொக மொகன
நக நக நக நக நக நக நகன
டிகு குண டிகு டிகு டிகு குண டிகுண

ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி
டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேல் முந்து
எந்தனை யாளும் ஏரக செல்வா
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்த் துதவும்
லாலா லாலா லாலா வேஷமும்
லீலா லீலா லீலா விநோதனென்று

உன்திரு வடியை உறுதி என்றென்னும்
என் தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் உயிராம் இறைவன் காக்க
பண்ணிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க

முப்பதிருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவை செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழு பதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
நானாம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பனை தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் கக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்ரவேல் காக்க
அறை இருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூன்யம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழகடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குரலைப் பேய்களும்
பெண்களை தொடரும் பிரமரா சதரும்
அடியனைக் கண்டால் அலறி கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் மன்னரும்

கண பூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டான் காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆணை அடியினில் அரும் பாவிகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவிகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஒது மஞ்சனமும் ஒருவழி போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதால் எனை கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதி கேட்டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிட கட்டு
கட்டி உருட்டு கால் கை முறிய

கட்டு கட்டு கதறிட கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூற்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தனலதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனிதொடர்ந்து ஓட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடிதுயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
பொழிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சாயம் குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புரிதி
பக்க பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைதால் சிலந்தி
பறக்குது அரனை பரு அறை யாக்கும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் அருள்வாய்
ஈரேழுல கமும் எனக் உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணால் அரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னை துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியை

காத்து தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை என்ற இனியவேல் முருதா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழனி பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேல
செந்தில் மாமலை யுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் ஷண்முக தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனை பாட
எனை தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் ரக்ஷி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயு தனார்

சித்தி பெற்றடிஎன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலை குரு வாழ்க
வாழ்க வாழ்க மலை குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரண துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்றன்பாய் பிரிய மளித்து
மைந்தன் என்மீது உன்மனம் மகிழ்ந்தருளி
தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந் ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவசம் இதனை

சிந்தை கலங்காது தியானி பவர்கள்
ஒருநாள் முப்பதா ரிரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீரனிய
அஷ்ட திக்குல்லோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருள்வர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்தநாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவச தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரை பொடி பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்த யெனதுள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந் துணவாக
சூர பத்மாவைத் துணித்தகை யதனால்
இருப தேழ்வர்க்கு உவன் தமுதளித்த
குருபரன் பழனி குன்றினில் இருக்கும்

சின்ன குழந்தை சேவடி போற்றி
எனை தடு தாட்கொள என்றன துள்ளும்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைகோர் அரசே

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்