Sunday, November 1, 2009

கடற்கரை இரவு



வெண்ணிலவு விழும் என்று

காத்து கிடந்தேன்.. கடல்

கரையில்


விழுந்த தினம்..இன்றல்லோ..

நான் கடலென உணர்ந்தேன்..

அவள் காதல் என்று

சொன்ன நிமிடம்..

Wednesday, December 24, 2008

மாற்றம்


சிலுவைகள்
சுமக்கின்றேன் நெடும்காலமாய்
என்று அறைகூவிய


ஏழையின்
முதுகில் சிலுவையை
புதுப்பித்து ஆறுதல்
உரைத்தான் அரசானவன்....