Monday, July 14, 2008

enge naan


காலை தேநீர்
நாளிதழ் செய்திகள்
நறுமண குளியல்

வாசனை திரவியம்
சுருக்கில்லா மேல்சட்டை
தோதான கால்சட்டை

தோளில் கணிப்பொறி
வார்த்தை செருகல்களாய்
தொடர் ஆங்கிலம்

காலை வணக்கங்கள்
முன்தள்ளிய மின்னஞ்சல்கள்
தேநீர் இடைவேளை

நிலை அறிக்கைகள்
வாடிக்கைகாரரோடு கலந்துரையாடல்
செயல் திட்டங்கள்

உணவு இடைவேளை
சமூக உறவு
வலைபக்கங்களில் சிறுதேடல்

சிறிய சோர்வு
வங்கி வலைபக்கங்களில்
சற்று சரிபார்ப்பு

தேநீர் இடைவேளை
அணி தலைவருடன்
சிறு கலந்துரையாடல்

பணியின் தொடர்ச்சி
நாள் அறிக்கை
அலுவலக பணிமுடிவு

வாகன நெரிசல்
சுற்றுசூழல் மாசு
இவையெல்லாம் கடந்து

வீடு வந்து
சேர்கையில் மாலை
எட்டு மணி

எல்லாம் சரியாக
உள்ளது சரியாக
எல்லாம் செய்தாகிவிட்டது

என்றாலும் ஏதோ
ஒன்றை மறந்ததுபோல்
மனம் பதறுகிறதே

சற்று நேர
யோசனைக்கு பின்னறிந்தேன்..
மறந்தது என்னைத்தான்....

இயந்திர வாழ்கை
இதற்கிடையில் இல்லாதாகின்றேன்
இன்றும் நான்..


1 comment:

tamizhppiriyan said...

pretty decent effort...melum ezhuthunga..vaazthukkal

//
சுருக்கில்லா மேல்சட்டை
தோதான கால்சட்டை //

pidicha varigal..